ஐ.நா.பிரதிநிதி வோல்டர் கேலன் இன்று வவுனியா விஜயம்

walterkelin200இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி பேராசிரியர் வோல்டர் கேலன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

விசேட வவுனியா முகாம் வன்னி இராணுவ தலைமையகத்திலிருந்து செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம் அருவித்தோட்டம் முகாம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். இவருடன் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ் விஜேயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் முக்கிய இராணுவ அதிபர், பொலிஸ் அதிகாரிகளும் இங்கு சென்றிருந்தனர். .

மக்களின் நிறைகுறைகள், மக்களுக்கான சேவைகள், ஏற்கனவே தங்கவைத்த மக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மேலும் செய்யப்பட வேண்டிய சேவைகள் என்பன குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடினர். அதன் பின்னர் வன்னி இராணுவ தலைமையகத்துக்குச் சென்று இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். வவுனியா நகரப் பகுதிகளையும், சில நலன்புரி நிலையங்களையும் விஜயம் செய்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.