கருணா அலுவலகத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

karuna3_013மட்டக்களப்பு வடமுனையிலுள்ள ஆயுதக்குழு முரளீதரன் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் உயிரிழந்துடன் பொறுப்பாளர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிகி்ழமை இரவு 10.40 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விநாயகமூர்த்தி முரளீதரன் அணி சார்ந்த 17 அகவையுடைய ரேகன், கொல்லப்பட்டுள்ளார். அலுவலகப் பொறுப்பாளர் முகிலன் படுகாயமடைந்து வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலுவலகத்தில் தங்கியிருந்த சந்திரசேககரன் மற்றும் குகன் ஆகியோரைக் காணவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.