கொல்லப்பட்ட தாயிடம் பால் அருந்திய பச்சிளம் குழந்தை-உலகில் எங்குமே நிகழாத கொடூரம்!

சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரிடமே பால் குடித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் மேலும் தெரிவிக்கையில் அன்றாடம் எறிகணைத் தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளும் மற்றும் இறந்தவர்களளை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன்.

நான் பணிசெய்த நாட்களில் சிறீலங்கா அரச படைகளின் கொடூமான செயல்களை நேரில் பார்த்து பேரதிர்ச்சியடைந்து விட்டேன்.

என் பணிநாளில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க தாய், கணவன், பிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். உடனே நாங்கள் அவர்களை இறக்கியவுடன் மருத்துவவர்களால் அவர்கள் சிகிச்கைக்குட்படுத்தப்பட்டனர்.

இருந்தபோதிலும் அத்தாய்க்கு பலத்தகாயத்தால் இரத்தம் போய்க்கொண்டிருந்தது. அந்நேரத்தில் குழந்தை அழவே, குழந்தைக்கு அவர் பாலூட்டினார். பால்குடித்துக் கொண்டிருக்கும்போதே அத்தாய் இறந்துவிட்டார். இச்சம்பவம் இவரின் கணவருக்குத் தெரியாது. ஆனால் குழந்தை தொடர்ந்தும் பால்குடித்துக் கொண்டிருந்தது. இந்தப் பரிதாபச் சம்பவம் தன் மனதை உருகச்செய்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.