கருணாநிதி, றோ போடும் அடுத்த நாடகம்

karunanidhi0903தமிழகத்தில் இந்திய லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையிலும் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையிலும் அதனைச் சீர்குலைக்கும் நோக்கோடு தமிழக அரசும் றோ இந்திய உளவு அமைப்பும் சேர்ந்து மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.

இதன்படி கருணாநிதியைக் கொல்லப் போவதாக புலிகள் மிரட்டல் விட்டுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி பரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக காவல்துறை உசார்படுத்தப்பட்டுள்ளதாம். மேற்படி கொலை அச்சுறுத்தல் கடிதம் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளதாம்.

இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தே தனது கட்சியில் இரண்டாம் நிலையில் இருந்த வைகோவை கட்சியை விட்டு வெளியேற்றி தனது குடும்ப வாரிசுகளை கட்சியின் முதன்மைப் பதவிகளில் இருத்தி சுகம் கண்டவர் கருணாநிதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.