நெதர்லாந்திடமிருந்து சிறிலங்காவுக்கான அபிவிருத்தி உதவிகள் நிறுத்தம்

netherlands-flagசிறிலங்காவுக்கான அபிருத்தி உதவிகளை நெதர்லாந்து இடைநிறுத்தியுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது.

சிறிலங்கா உட்பட பொஸ்னியா, எரித்திரியா, அல்பானியா, ஆர்மேனியா, மசடோனியா, கம்போடியா ஆகிய நாடுகளின் அபிவிருத்திக்கு வழங்கப்படும் உதவிகளையே நெதர்லாந்து தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றது.

குழப்பமான அரசியல் நிலை, பாதுகாப்பில்லாத நிலை, பிற நிறுவனங்களிடம் இருந்து அதிகமான உதவிகளைப் பெறுகின்றமையை காரணம் காட்டி மேற்படி நாடுகளுக்கான உதவிகளை இடைநிறுத்துவதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அபிவிருத்தி உதவிக்கான இடைநிறுத்தம் தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் கூன்டோஸ் அறிவித்திருப்பதுடன் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் சிறிலங்காவுக்கு அதிக உதவிகளை அபிவிருத்திக்கு என நெதர்லாந்து அரசாங்கம் வழங்கியிருந்தும் அதனை தமிழின அழிப்பிற்கே மகிந்த அரசாங்கம் பயன்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.