வரலாற்றில் மிகப் பெரிய தேசத் துரோகி ரணில் விக்ரமசிங்கவே: ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda-ranil-2சிறிலங்கா வரலாற்றில் மிகப் பெரிய தேசத் துரோகி ரணில் விக்ரமசிங்கவே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இன்னும் ஓரிரு மாதங்களுக்கு ஆட்சியைத் தொடர்ந்திருந்தால் பதுளை,மொனராகலை, நீர்கொழும்பு வரையில் ஈழ இராச்சிய வரைபடம் நீண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய துரோகச் செயலாக 2002ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொய்ப்பிரச்சாரங்களுக்கு செவி மடுக்காது நாட்டை மீட்டெடுக்க அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.