யுத்தத்தினால் இலங்கை ஜனாதிபதியே அதிக இலாபம் பெறுகிறார்

mahinda1இலங்கை அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்ததினால், மக்களை விட அதிக இலாபம் பெறுவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவென, ஐக்கிய இராச்சியத்தின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்கால தேர்தல்களின் வெற்றிக் குவிப்புக்களுக்காகவே, மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் யுத்தத்தினை முன்னெடுத்து வருவதாக, அந்த இணையத்தளத்தினால் கடந்த 3 ம் திகதி வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து யுத்த நிறுத்தத்தினை முன்னெடுப்பதன் ஊடாக, தென்பகுதி சிங்கள பேரின வாதிகளின் வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலம், தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே தம்மால் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என மஹிந்த கருதுவதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனப்பிரச்சினை மற்றும் அரசில் நிலை தொடர்பில் கலநதுரையாட, தமிழ் கட்சிகளுக்கு மஹிந்தவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், யுத்த நிறுத்தத்தினை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த அழைப்பினை நிராகரித்தனர்.

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் பாரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் பாரிய மன அழுத்தங்களுக்கும் உள்ளான நிலையில் வாழ்கின்றனர். மோதல் பிரதேசங்களில் உள்ள மக்கள், அச்சத்துடன் கூடிய சூழ்நிலையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.