வணங்காமண் இலங்கைக்கு வந்தால் தாக்கி அழிக்கவும் – ஹெல உறுமய

2110ellawelahimi_jவன்னியிலுள்ள மக்களுக்காக நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் போர்வையில் “வணங்கா மண்’ என்ற கப்பல் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வர முயற்சிப்பதென்பது விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் பிரசாரத்தை பெற் றுக்கொடுப்பதற்கே ஆகும்.

எனவே இலங்கை கடல் எல்லைக்குள் கப்பல் வந்தால் தாக்கியழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசாங்கத் தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு, பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக மேலும் தெரிவிக்கையில்,
 கப்பல் வருவதென்றால் எமது அரசாங்கத்திடம் அனுமதி பெற ?னைவதை விடுத்து பலாத்காரமாக நுழைய முடியாது.

அதேவேளை சர்வதேச செஞ்சிலுவைக் கொடியுடனோ ஐ.நா. கொடியுடனோ கப்பல் வருமானால் எமது நாட்டிலுள்ள அவ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி அனுமதியை பெற வேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே “வணங்கா மண்’ என்ற கப்பலில் வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பப் போவதாக சர்வதேச ?தியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தோல்வியின் விளிம்பில் உயிர் மூச்சு விடும் புலிகளுக்கு சர்வதேச ரீதியிலான உதவிகளை பெற்றுக் கொடுத்து ஒட்சிசன் ஏற்ற முனையும் புலி ஆதரவாளர்களின் தந்திரோபாயமே இதுவாகும். அத்தோடு வன்னியில் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உதவி செய்வதில்லையென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதும் இதன் உள்நோக்கமாகும்.

இதன் மூலம் சர்வதேச நாடுகளின் தலையீடுகளை அதிக?க்கச் செய்ய புலி ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.

விடுதலைப் புலிகளே வன்னியில் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இந்த “வணங்கா மண்’ என்ற கப்பல் பலாத்காரமாக எமது நாட்டு கடல் எல்லைக்குள் புக முனைந்தால் அழித்தொழிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் எமது கட்சியின் தேசிய அமைப்பாளருமான சம்பிக ரணவக கோ?க்கை விடுத்துள்ளார் என்றும் நரேந்திர குணதிலக தெ?வித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.