58ம் 59படையணியை கொண்டு நடாத்தும் இந்திய இராணுவம்

sri_lankan_army_soldier_commando_sri_lanka_07november2008_news_0042008இல் சிறிலங்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட 58ம் படையணி வலிந்த தாக்குதல் நடாத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு படையணி. இந்த படையணியே பூநகரி, ஆனையிறவு, மற்றும் பரந்தன் ஏ35 பாதையில் புதுக்குடியிருப்புவரை தனது தாக்குதலை நடாத்தி வந்தது.  இந்த படை அணி புலிகளின் தொடர் தாக்குதலால் தனது படைத்திறனை  சிறுது சிறுதாக இழந்து  கொண்டிருந்தது.

ஆனால் அண்மையில் நடைபெற்ற புலிகளின் பாரிய தாக்குதல்களால் இந்த படையணி முற்றாகவே சிதைந்து இதன் பல பிரிவுகளை இணைத்தே தனது தாக்குதலை சிறிலங்கா இராணுவம் நடாத்தி வந்தது. தற்போது இதன் செயற்திறன் முற்றாக புலிகளால் அழிக்கப்பட்டதை அடுத்து இந்திய இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படை பிரிவை சேர்ந்த பல படையினர் 58ம் படையணியில் முன்னணி தாக்குதலை நடாத்தும் படையணியாக செயற்படுகின்றனர். சிறீ லங்கா இராணுவத்தின் சீருடையில் புதியரக ஆயுதங்களுடன் இவர்கள் தற்போது செயற்படுவதாக விரக்தி அடைந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தமிழ் நண்பருக்கு இந்த செய்தியை வவுனியாவில் வைத்து கூறியுள்ளார்.

58ம் படையணியை சேர்ந்த இந்த சிப்பாய் ஒரு தொற்று நோய்க்காக வவுனியாவில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இந்த நேரத்திலேயே இந்த தகவல்களை கசிந்துள்ளார். தமது படையணியில் 58ஆம், 59ஆம் படையணி முற்றாகா சேதமாகி விட்டதாகவும் சிறப்பு தாக்குதல் அணியான 58அம் படைபிரிவில் பல டிவிசன்களில் முற்றாக இந்திய கொமாண்டோக்களும் 59ம் படையணியில் ஆட்பலத்தை நிவர்த்தி செய்யும் வகையில் 50சதவீதமான இந்திய சிப்பாய்கள் இருப்பதாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இராணுவத்தை வழி நடாத்தும் அதிகாரிகளாக இலங்கை இந்திய ஓப்பந்த காலத்தில் இந்திய இராணுவத்தில் படையாற்றி தற்போது பதவி உயர்வு பெற்ற சில அதிகாரிகள் இருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.