பத்திரிகையாளர் சந்திப்பில் ப.சிதம்பரத்தை நோக்கி ஷூ வீச்சு

chidambaram1டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சீக்கிய கலவரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அப்போது அங்கு இருந்த சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தனது ஷூவை கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஷூ அவர் மீது படவில்லை. இதையடுத்து ஷூவை வீசியவரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால் ஷூ எறியப்பட்டதை பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த சம்பவத்தால் எனது கவனம் சிதறவில்லை. ஒரு நபரின் செய்கையால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு பாதக்கப்படக்கூடாது. அனைவரும் அமைதியாக அமருங்கள். நான் அந்த நபரை மன்னிக்கிறேன் என்றார். சிதம்பரத்தை நோக்கி ஷூ எறியப்பட்டது அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.