வந்தித்தாயா..வந்திட்டான் …புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் ‐ ஹெல உறுமய

mahinda2020pikkuவிடுதலைப்புலிகளின் இறுதி கட்டத்தில், அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி கைகளை சுட்டுக்கொள்ள வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் எனவும்  இதனை மீட்டமை தொடர்பில் படையினருக்கு கௌரமளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தற்போது இருப்பது, போர் தவிர்ப்பு வலயமான ஒரு சிறிய பகுதி மாத்திரமே.

30 வருடங்களாக தீரக்கப்படாத பிரச்சினையாக அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்ட விடுதலைப்புலிகள் தொடர்பான பிரச்சினையை மிகவும் குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைள் வெளிநாட்டு சக்திகளையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருந்த, ஒரே தடையில் 600 வேட்டுகளை தீரக்கவல்ல துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை நோக்கும் போது, விடுதலைப்புலிகள் இலங்கைக்கு மாத்திரமல்லாது, இந்தியாவுக்கு அழுத்தங்களை கொடுக்க தயாராகி இருந்தனர் என்பது புலப்படுகிறது.

இவ்வாறான ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திடம் கூட காணப்படவில்லை. இந்தியா பலமான நாடாக வளர்ச்சியடைந்து வருவதற்கு எதிரான மேற்குலக நாடுகள், விடுதலைப்புலிகள் ஊடாக இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்காக, புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து போஷித்தனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் இந்த சந்தர்ப்பத்தில் கூட விடுதலைப்புலிகளுக்கு வலு சேர்க்க சில மேற்குல நாடுகள் முயற்சிக்கக்கூடும்.இவ்வாறான எந்த சக்திகள் வந்தாலும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டதை நிறுத்த போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது.

எவ்வாறான சக்திகள் வந்த போதிலும் அவற்றை முறியடித்து, எதிர்கால சந்ததியினருக்கு நாட்டை பாதுகாத்து கொடுப்பது, நாட்டு தலைவரின் கடமை எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.