ஜனநாயகம் மீறப்படும் நாடுகளில் இலங்கை 22ம் இடத்தில் உள்ளது

srilanka-tamilsஉலக ஜனநாயக நாடுகளில், அதிக அளவில் ஜனநாயகம் மீறப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 22ம் இடத்தில் உள்ளது என உலக பொருளியல் அறிஞர்களின் சங்கம் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தம்மை ஜனநாயக நாடுகளாக அறிவித்து கொள்ளும் நாடுகளில் உண்மையில் ஜனநாகம் காணப்படுகிறதா? என்பது குறித்து, உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இலங்கைக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான சுதந்திரம், அரசியல் கலாசாரம், பொது நடவடிக்கைகளில் பொது மக்களின் பங்களிப்பு, மற்றும் அரசாங்க ஒழுங்கமைப்பு போன்ற 60 சுட்டெண்களின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக உலக பொருளியல் அறிஞர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை இலங்கை சிறிய நாடாக இருப்பினும், எத்தகைய ஜனநாயக உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.