ஈழத்தமிழரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கருணாநிதி, மன்மோகன்சிங்கிற்கு மீண்டும் தந்தி அனுப்பியுள்ளார்

karunanidhi09032இலங்கையில் மோதல்களால் பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, இந்திய பிரதமருக்கு மீண்டும் தமிழக முதல்வர் வலியுறுத்தி தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அத்துடன் வடக்கு பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற அகோர வன்முறைகளை நிறுத்த, உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என அவர் மன்மோகன் சிங்கை கோரியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக முதல்வரினால் நேற்று இந்திய பிரதமருக்கு தந்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தை நிறுத்தி இருத்தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு இணங்க செய்ய இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் அந்த தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தந்தியின் பிரதிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மற்றும் உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, நாளையதினம், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.