விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

jy12122008வைகோ தலைமையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

தற்போது, மூன்றரை லட்சம் தமிழர்கள் முல்லைத் தீவில், மரண பயங்கரத்தில் சிக்கி உள்ளனர். நினைத் தாலே நெஞ்சம் நடுங்கும் பேரழிவு, ஈழத்தமிழ் மக்களை முற்றுகை இட்டு உள்ளது. உடனடியாக இலங்கை அரசு தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தி, போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று, இந்திய அரசு முழுமையான அரசியல் அழுத்தத்தைத் தந்து வற்புறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திர இறையாண்மையுள்ள தனித்தமிழ் ஈழ தேசம் மலர் வது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு ஆகும் என்று, 1995 ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மாநில மாநாட்டில் தீர்மா னம் நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தையே இப்பொதுக் குழு மீண்டும் வலியுறுத்துவ தோடு, தனித்தமிழ் ஈழம் மலர, தொடர்ந்து குரல் கொடுப்போம்.
 
இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் மக்களின் உரிமை வாழ்வுக்காக, மகத்தான தியாகங்களைச் செய்து யுத்த களத்தில் போராடி வருவ தோடு, ஈழத்தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று இருக்கின்ற விடுதலைப்புலிகள் இயக்கத் தின் மீதான தடையை, இந்திய அரசு நீக்க வேண்டும்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைமை யிலான கூட்டணியை, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வதற்கு அரும்பணி ஆற்றுவது.
 
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச்செயலாளர் நாஞ்சில் சம்பத்தை “தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைக்கும், இதே அடக்குமுறைச் சட்டத் திற்கு ஆளாகி இருக்கின்ற பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரின் கைதுக்கும் பலத்த கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.