எறிகணைத் தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் பலி

logo-icrcசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்நாட்டுப் பணியாளர் ஓருவர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சின்னத்துரை குகதாசன் என்ற பணியாளரே இவ்வாறு எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
 
முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் உள்ள அம்பலவான்பொற்கேணி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு நீர் விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

2002ம் ஆண்டு முதல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நீர்க்குழாய் தொழில்நுட்பவியலாளராக குகதாசன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
புதுமத்தளான் பகுதியிலிருந்து சிவிலியன்களை அகற்றும் பணிகளிலும் குகதாசன் காத்திரமான பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சின்னத்துரை குகதாசனின் இழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கெஸ்டல்லா தெரிவித்துள்ளார்.
 
கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் மற்றுமொரு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் வடிவேல் விஜயகுமார் என்பவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.