கிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்

eela-tamil கிழவர் கருணாநிதி இனி உன்னை கலைஞர் கருணாநிதியென தமிழர்கள் சொல்லமாட்டார்கள்.சாகின்ற நாள் வந்துவிட்ட வயதில்கூட உனது பதவி வெறிக்காக ஈழத்தில் தமிழர்களைக் கொன்றுகுவிக்கும இலங்கைப் பயங்கரவாத அரசிற்க்கும் சோனியா தலைமையில் உள்ள கொங்கிரசிற்கும் துனணபோகின்ற உன்னையெப்படி கருணாநிதியென சொல்லமுடியும்???

பால்குடிக் குழந்தைகளும்;இ கற்பிணிப்பெண்களும் வயோதிபர்களும் ஊண் உறக்கமின்றி அணு அணுவாகத் துடிதுடித்துக்கொண்டிருக்கும் எமது ஈழத்தமிழர்களை கனரகஆயுதங்களைப் பாவித்தும், எரிகுண்டுகள், நச்சுக்குண்டுகளை வீசியும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறன்றது, இது உனக்கும் தௌ்ளதெரிவாக தெரியும்.  நீ நினைத்தால் தற்போது உன்னிடமிருக்கும் பதவியைக்கொண்டு நிறுத்த முடியம். இதனை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு தெரிவிப்பதற்காக எங்கள் உறவுகளாகிய தமிழகத்தை சேர்ந்த எத்தனை பேர் தன்னைத் தானே தீயில் வேகி தமது உயிர்களை அர்ப்பணித்ததற்கு காரணம் உனக்கு தெரியவில்லையா?

அதைக்கூட நீ பொருட்படுத்தவில்லை. இவைகளையெல்லாம் நீ பொருட்ப்படுத்தாமலிருப்பதற்கு காரணம் சோனியாவுடன் கூட்டு சேர்ந்து உனது பதவியை தக்கவைப்பதற்க்க மட்டுமே. இந்தப் பதவியை வைத்து நீ வேறு என்ன செய்யப்போகின்றாய்?  ஈழத்தமிழ் உறவுகளுக்கா தீமூட்டீ உயிர்தியாகம் செய்த எங்கள் உறவுகள் பிறந்த தமிழ் மண்ணில் தானே நீயும் பிறந்தாய்?

சொந்த மண்ணில் அனாதைகளாக தினம் தினம் துடிதுடித்து பலியாகிக்கொண்டிருக்கும் எமது தமிழ் உறவுகளைக் காப்பாற்றினால் தான் நீ தமிழனாக இருப்பதற்க்கும், பதவியிலிருப்பதற்கும் உனக்கு அருகதையுண்டு.  உன்னை பதவிக்கு கொண்டுவந்ததும் தமிழ்தான், கடைசியில் உன்னை பாடையில் தூக்கிப்போவதும் நான்கு தமிழ்ர்தான். கொங்கிரஸ்சுமில்லை சிங்கள அரசுமில்லை.

உனது கடைசிக் காலத்திலாவது தமிழர்களுக்காக நல்லதைச் செய். சோனியாவுடனும், சிங்களத்துடனும் சேர்ந்து இன அழிவுக்கு துணை போகாதே. உன்னோடு தி.மு.கவும் முடிந்துவிடும். நீ ஈழத்தமிழை  மட்டுமல்ல தமிழகத்தமிழையும் ஏமாற்றிவிட்டாய். தமிழர்கள் சிந்திய இரத்தம் உன்னை அழித்துவிடும்.

இது  ஒரு தமிழனின் சாபம்.

(ஆக்கம் அனுப்பியவருக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்க subsritha@yahoo.com)

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.