இராணுவ நடவடிக்கைக்கு புத்து}க்கம் கொடுத்துக்கொண்டு அரசியல் தீர்வுபற்றி சிறிலங்காவுக்கு அமெரிக்கா கீதாஉபதேசம்

obamahilary20krishnaஅப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுப் பாதிக்கப்படுவதற்குக் காரணமான இனப்பிரச்சினைக்கு, இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியான தீர்வினை நோக்கித் தனது செயற்பாடுகளை முன்னகர்த்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா நேற்று வலியுறுத்தியுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரிச்சட் பவுச்சருக்கும், அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் புலம்பெயர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலானா சந்திப்பின் பின்னர், ரிச்சட் பவுச்சர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் து}துவர் ரொபேர்டோ பிளேக்கும் தொலை-ஒளித்தகவல் தொடர்பு மூலம் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் போது, பொது மக்களினதும், usa_20090506001புலம்பெயர்ந்தவர்களினதும் கோரிக்கைகளுக்கு அமைய இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சிக்கியுள்ள, மோதல் தவிர்ப்புப் பிரதேசத்தில், இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.