புலிகளின் செயற்பாடுகளை ஆராய இந்தியா செய்மதி ஏவவுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இந்தியா விசேட செய்மதியொன்றை ஏவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்காக இந்தியா செய்மதியொன்றை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் நாட்டை மையப்படுத்தி இந்த செய்மதி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 20ம் திகதி குறித்த செய்மதி விண்ணுக்கு ஏவப்பட உள்ளதாகவும், இதன் மூலம் விடுதலைப் புலிகளின் உடுருவல்களைத் தடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக முதல் தடவையாக இந்தியா செய்மதியொன்றை ஏவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.