புதுக்குடியிருப்பு சிங்கள பெளத்த புனித பூமியாம்?

12_04_2009_029_002_004விடுதலைப் புலிகளுடனான போரில் அரசபடைகள் வடக்குகிழக்கின் ஒவ்வொரு இடத்தைப் பிடித்த போதும், தென்னிலங்கையில் அது பௌத்த சிங்களத்தின் வரலாற்று வெற்றி என்றே புகட்டப்படுகிறது.

அண்மையில் புதுக்குடியிருப்பைப் படையி னர் கைப்பற்றியிருக்கின்ற நிலையில் ரஜரட்ட இராச்சியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே காணப்பட்ட பண்டைய நகரமே புதுக்குடியிருப்பு என்றும், இதை மீட்டதற்காக

படையினருக்கு நன்றி கூறவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த தேரர்.

புதுக்குடியிருப்பை சிங்கள மன்னர்களின் வரலாற்றுடன் பிணைக்கச் செய்து தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு உரிமை கொண்டõடுகின்ற முயற்சியே இது.

ஒட்டுமொத்த வடக்குகிழக்கும் சிங்கள மக்களின் தாயக பூமி என்பது போன்றும் தமிழர்கள் இடையில் வந்து குடியேறியவர்கள் என்பது போன்றும் தான் அவரது கருத்துகள் அமைந்திருக்கின்றன.

“முல்லைத்தீவு, நெடுங்கேணி, பொக்காவன்னி, உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்ற எமது புராதன சின்னங்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை.

அத்துடன் ஏனைய இடங்களில் பௌத்த சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.’ என்றெல்லாம் அவர் கூறியிருக்கிறார்.

எல்லாவல மேதானந்த தேரரிடம் மட்டும் இந்த மனநிலை காணப்படவில்லை. அரசாங்கத்திடமும் இதே மனநிலைதான் காணப்படுகின்றது.

சிங்கள மக்களே மறந்துபோன பல நூற்றõண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர்களின் பெயர்களையெல்லாம் கூறி, ஏமாற்றுகின்ற புதியதொரு அரசியல் கலாசாரம் இப்போது பிறந்திருக்கிறது.

புதுக்குடியிருப்புக்கு மட்டுமே எல்லாவல மேதானந்த தேரர் உ?மைகோரவில்லை. கிளிநொச்சி பிடிபட்ட போதும் அதையே தான் அவர் செய்தார்.

கிளிநொச்சியில் அதிகளவில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.

1500 பௌத்த விகாரைகளும், சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1500 குளங்களும் அங்கிருப்பதாகவும் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் எல்லாவல மேதானந்த தேரர்.

கிழக்கைப் படையினர் கைப்பற்றிய போதும் அவர் இப்படித்தான் கூறியிருந்தார்.

“தொப்பிக்கல (குடும்பிமலை) றுகுணு ராஜ்ஜியத்தின் போது “குடாதிம்புலாகல’ என்று அழைக்கப்பட்டது.

அதையண்டிய பகுதிகளில் தெவெனிகல, கெபிதிகல, நரக்க?ல்ல, நெலுகல, கலவாகல, நல்மண்டியாகல ஆகிய மலைகள் மாதுறு ஓயாவின் கரையில் இருந்தன.

மாதுறுஓயாவை அண்டியதாக கித்துள்வௌ, றுகம்வௌ, வடமுனையாவௌ, வாகனேரி உள்ளிட்ட 150 குளங்கள் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்டு விவசாய வளம் மிக்க பிரதேசமாக இருந்தது.

காலப்போக்கில் றுகுணு ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இங்கிருந்த குளங்களும், கால்வாய்களும் பௌத்த விகாரைகளும் அழிக்கப்பட்டு விட்டன’ என்று கூறியிருந்தார் எல்லாவெல மேதானந்த தேரர்.

அத்துடன் ஈச்சிலம்பற்று உள்ளிட்ட கிழக்கின் பல பகுதிகளையும் பௌத்த சிங்கள பாரம்பரிய பிரதேசமாக உரிமை கோரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தை அரசபடைகள் கைப்பற்றிய போது அதை “யாப்பாபட்டுன’வின் வீழ்ச்சி என்று கோலாகல வைபவமொன்றில் வைத்து வெற்றிச் செய்தியை ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருந்தார் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை. யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதான அந்தச் செய்தி கூறவில்லை.

“யாப்பாபட்டுன’வைக் கைப்பற்றியதாகவே அந்தச் செய்தி கூறியது.

அதேபோன்று வவுனியா மன்னார் வீதியைப் படையினர் கைப்பற்றிய கையோடு பறையனாலங்குளத்தின் பெயரை மாற்றியது அரசõங்கம். “சப்புமல்புர’ என்ற பண்டைய சிங்கள மன்னனின் பெயரை இணைத்து உருவாக்கிய புதிய பெயருடன் பறையனாலங்குளத்தில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையால் பெரும் சர்ச்சைகள் உருவாகின.

தமிழ் மக்கள் வாழ்ந்த நிலம், இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளப்பட்ட வேளைகளிலெல்லாம் அதை சிங்கள பௌத்த வரலாற்றுடன் தொடர்புபடுத்தி திரிபுபடுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் எல்லாவல மேதானந்த தேரர் கூறியிருக்கின்ற இனனொரு விடயத்தையும் பார்க்க வேண்டும். கைப்பற்றப்பட்ட புதுக்குடியிருப்பு போன்ற வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அதுவும் இன விகிதாரசாரப் படியே குடியேற்றங்கள் நடத்தப்பட வேண் டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இங்கு அவர் கூற வந்த இனவிகிதாசாரம் என்பது என்ன? ஒட்டுமொத்த நாட்டினதா? அல்லது மாவட்டத்தினதா? அல்லது பிரதேசத்தினதா என்பது தெளிவாக இல்லை.

எது எவ்வாறாயினும் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இப்போதே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளிடமிருந்து அழுத்தங்கள் வரத் தொடங்கி விட்டன.

தமிழ்மக்கள் பாரம்பரிய பிரதேசங்கள் படைபலத்தின் மூலம் கட்டுப்பாட்டில் கொண்டு வர ப்பட்ட போதெல்லாம் இதுபோன்றே உரிமை கொண்டாடப்படுவதும் குடியேற்றம் பற்றிய சிந்தனைகள் வெளிப்படுவதும் வரலாறாகி விட்டது.

எதிர்காலத்தில் தமிழ்மக்களின் பிரதேசங்களை சிங்கள பௌத்த பாரம்ப?ய வாழ்விடமாக உரிமை கோருவதற்கு இன்னும் பல முயற்சிகள் எடுக்கப்படலாம்.

ஆனால், இவையெல்லாம் இன ரீதியான அமைதி குலைப்பு நடவடிக்கைகளாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

புலிகளுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போராகக் காட்டிக் கொள்ள அரசாங்கம் நினைத்தாலும், தமிழ்மக்கள் மனதில் அது எத்தகைய எண்ணப்பாட்டைத் தோற்றுவித்திருக்கிறது என்பது அனைவருக் கும்  தெரிந்த விடயம்.

அதுபோன்றே சிங்கள மக்கள் மத்தியில் இதை தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்ற கருத்து விதைக்கப்பட்டிருப்பதையும் மறுக்க முடியாது.

இந்தநிலையில் தமிழ்மக்கள் வாழ்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றி விட்டு, அதற்கு சிங்கள பௌத்த வரலாற்றுடன் முடிச்சுப் போடுவதும் குடியேற்றங்கள் பற்றிக் கொக்கரிப்பதும் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற வழியாக அமைய மாட்டாது. இது இனப்பிரச்சினையை இன்னும் கூர்மையடையவே செய்யும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.