தமிழக தேர்தல் – கிளம்பும் ‘தமிழர் படை’!

p42b”டொரண்டோவில் வசிக்கும் பதினான்கு வயதுச் சிறுமி, இலங்கை நிகழ்வுகள் குறித்து எழுதிய கடிதம் ஒன்றை, ‘தென்றல்’ எனும் இணைய தளத்தில் படித்தேன்.

அதிலிருந்த சில வரிகள்தான் இவை..! இலங்கைத் தமிழர்களின் இன்னல் குறித்து எங்கெங்கோ வசிக்கும் தமிழ் உள்ளங்கள் துடித்துத் தவிக்கிற நிலையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் கண்கட்டு வித்தை நடத்துகிறார்கள் என்று நினைத்தேன். அதான் கண் கலங்கியது!” என்றார்.

”போர் உச்சநிலையை எட்டிவிட்டது. வன்னிக் காட்டிலிருந்து ‘என் பிடி சாம்பல்கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது!’ என்று உத்தரவு போட்ட பிரபாகரன் நிலைமை குறித்து பலமாகக் கேள்விக்குறிகள் எழும்பி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பேரணி நடத்தி தன் பங்கைத் தீர்த்துக் கொள்ளப் பார்த்திருக்கிறது தி.மு.க! தமிழக காங்கிரஸ்காரர்களுக்கோ வேறொரு அச்சம்… ‘இந்த நேரம்பார்த்து பிரபாகரனுக்கு ஏதாவது ஆகிப் போனால் என்னாவது?’ என்று தங்களுக்குள் கூடிக் கூடிப் பேசுகிறார்கள்!”

”பிரபாகரன் மீது அவர்களுக்கென்ன திடீர் அக்கறை?”

”சரியாப் போச்சு! ராஜீவ் படுகொலை உள்ளிட்ட பல காரணங்களால் விடுதலைப் புலிகளை மொத்தமாக வெறுத்து ஒதுக்கிவிட்டவர்கள்கூட, பிரபாகரன் உயிருக்கு ஆபத்து என்றாகிவிட்டால்… சென்டிமென்ட்டில் உள்ளம் கரைந்து போய்விட மாட்டார்களா? ‘இத்தனைக்கும் காரணம் காங்கிரஸ்தான். அந்தக் கூட்டணிக்கு ஓட்டுப் போடாதீர்கள்’ என்று தமிழ் வாக்காளர்களைத் தூண்டிவிடுவதற்கு பிரமாண்டமான ஒரு படையே தயாராவதாகவும் தகவல் வருகிறதே…”

”அதைச் சொல்லும் விவரமாக..?”

”வெளிநாட்டுவாழ் தமிழர்களின் நிதி உதவியோடு தமிழகம் முழுக்க டூர் அடிக்கத் தயாராகிறது இந்த உணர்வாளர்கள் படை. அரசியல் சார்பற்ற இந்த உணர்வாளர்கள், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 120 பேர் கொண்ட குழுவாக இருப்பார்களாம். சட்டமன்றத் தொகுதி தோறும் 20 பேராகப் பிரிந்து முகாம் அடிப்பார்களாம். நாவன்மை மிக்க பேச்சாளர்களும் இதில் இருப்பார்களாம். உள்ளார்ந்த கிராமங்கள் வரை ஊடுருவி, ‘மத்தியில் ஆளும் அரசு, இலங்கை அரசாங்கத்துக்குச் செய்த உதவிகளைப் பாருங்கள். அங்குள்ள தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய காட்சிகளைப் பாருங்கள்…’ என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களைக் காட்டி, காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் நடத்துவார்களாம் இந்தக் குழுக்களில் இருப்பவர்கள்!”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.