ஊடகங்கள், யுத்த வலயத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது

rsfஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யுத்த வலயத்திற்கு சென்று சுயாதீனமான முறையில் செய்திகளை சேகரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடை ஏற்றுக்கொள்ள முடியாதென பாரிசை மையமாகக் கொண்டு இயங்கும் எல்கலைகளற்ற ஊடகவியலாளர் பேரவை தெரிவித்துள்ளது.
 
பாரிய மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் செயல்கள் மோதல் இடம்பெற்று வரும் வலயங்களில் இடம்பெற்று வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமை குறித்து உள்நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்களுக்கு காணப்படும் தார்மீக கடமைக்கு மதிப்பளித்து அனுமதி வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆயுத படையினர் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறு செய்து வருவதாக ஆர்.எஸ்.எப் குறிப்பிட்டுள்ளது.
 
துரதிஸ்டவசமாக, ஊடகவியலாளர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக் காணப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கை முக்கிய இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.