எதிர்காலத்தில் எல்ரிரிஈ (LTTE) என்ற நான்கு எழுத்துக்களை பயன்படுத்தும் தேவை இருக்காது ‐ கோத்தபாய

kothapayaஎதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் சுருக்கமான ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எல்ரிரிஈ (LTTE) என்ற நான்கு எழுத்துக்களை எவரும் பயன்படுத்தும் தேவை இருக்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 விடுதலைப்புலிகள் தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமையில், அந்த அமைப்பு சீர்குலைந்துள்ளதாகவும் புலிகளின் தலைவர் கோழையாக மாறியுள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

மூச்சிழந்து வரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சில நாடுகள் உயிரூட்ட முன்வந்துள்ளன. இவ்வாறான கோழைக்கு ஒருபோதும் உதவியளிக்க வேண்டாம் என அந்த நாடுகளை தாம் கேட்டுக்கொள்வதாகவும் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கில் சாதாரண மக்கள் மத்தியில் சென்று உயிரை பாதுகாத்து கொள்ள முயற்சிக்கும் பிரபாகரன், அப்பாவி பொதுமக்கள் காரணமாகவே உயிர் தப்பியுள்ளதாகவும், அந்த மக்கள் அங்கு இல்லாதிருந்தால், இரண்டு மணித்தியாலங்களில் பிரபாகரன் பிடிக்கப்பட்டிருப்பார் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.