கோவையில் பேரணி மற்றும் இராணுவ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழர்கள் கைது

10451ஈழத்தில் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை கோவையில் பேரணி மற்றும் இராணுவ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி , பொள்ளாச்சி மனோகரன் , தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம் , பொள்ளாச்சி பிரகாசு , திருப்பூர் அங்ககுமார், ஈரோடு இராம.இளங்கோவன் , நாத்திகஜோதி , சேலம் மார்ட்டின் , டேவிட் மற்றும் மாணவர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.