காலாவதியான குளிர்பானம் அருந்தியதால் வாந்தி எடுத்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பயணிகள்

srilanken_logoசென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தியதனால் பயணிகள் வாந்தி எஐத்ததினால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் செல்லும். அந்த விமானம் சென்னை வராததால் பகல் 12 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்வதற்காக 160 பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து முதல் மாடியில் காத்திருந்தனர்.

நீண்ட நேரமாகக் காத்திருந்ததால் பயணிகளுக்கு சிற்றுண்டி, குளிர்பானத்தை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் வழங்கியது. குளிர்பானம் அருந்தியவுடன் பயணிகள் சிலர் வாந்தி எடுத்தனர். உடனே குளிர்பான போத்தல்களைப் பார்த்தபோது அவை காலாவதியானவை என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விமான பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதற்குள் மேலும் சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தனியார் ஒப்பநதக்காரர் கொடுத்த குளிர்பானத்தையே தாங்கள் வழங்கியதாக ஊழியர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவருக்கும் புதிய குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் 12.20 மணிக்கு விமானம் கொழும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.