கிளஸ்டர் குண்டுகளை வீசியமை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் – சர்வதேச மன்னிப்புச் சபை

amnisty இலங்கை அரசாங்கம் மக்கள் வாழும் பகுதிகள் மீது கிளஸ்டர் குண்டுகளை வீசியமை சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் பேச்சாளரின் கருத்துப்படி புதுக்குடியிருப்பிலுள்ள பிரதான வைத்தயசாலை கிளஸ்டர் குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. அது தற்போது வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் வைத்தயசாலை பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது. 16 மணித்தியாலங்களாக தொடர் செல்வீச்சுக்கும் குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளில் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிப்பதென்பது போர்க்குற்றமாகக் கருதப்படக் கூடியது என்கிறார் சர்வதேச மன்னிப்புச் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் சபையின் சாம் சரீப்.

கிளஸ்டர் குண்டுகள் தடை ஒப்பந்தம் ஒன்றின் மூலம் அவற்றின பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. மோதலின் போது சர்வதேச மனிதாபின சட்டங்களை மதிக்கவேண்டும் என எவரும் எண்ணியதாகத் தெரியவில்லை.   எப்போதாவது இது பாவிக்கப்பட்டது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளியாகிறார்  எனவும் அவர் தெரிவித்தார்.

கிளஸ்டர் குண்டுகளைப் பாவிப்பது, எடுத்துச் செல்வது களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது என்பவற்றைத் தடைசெய்யும் நோக்கில் சர்வதேச மன்னிப்பச் சபையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.