முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயம் மீது இன்று காலை 5 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள்

முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயம் மீது இன்று காலை 5 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக வைத்திய கலாநிதி சத்தியமூhத்;தி தெரிவித்துள்ளார்

உடையார் கட்டு மருத்துவ மனைக்கு இதுவரை 7 நோயாளர்களர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் எறிகணைகள் விழ்ந்து வெடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மக்கள் தொடர்ச்சியாக பதுங்குகுழிகளினுள் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவசர தேவைகளுக்காக வெளியேறும் மக்கள் காயமடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
இதேவேளை பாதுகாப்பு வலய பகுதிகளில் ஐநா மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் இதனால் அங்கு இடம்பெற்று வரும் அனர்தங்கள் தொடர்பில் அவர்களால் தெளிவாக அறிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.