பிரபாகரன் ஆளும் கட்சியில் நாளை இணைந்து கொண்டாலும் அவருக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் ‐ ஐ.தே.க

unp_kurunagle_mpவிமல் வீரவன்ச, கருணா மற்றும் பிள்ளையான் உள்ளிட்டோர் தீவிர ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், அவர்களுக்கு அரசாங்கத்தின் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல் ஆயுதங்களை களைந்து நாளைய தினம்  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இணைந்து கொண்டாலும் அவருக்கும் அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசாங்கம் தயங்காதென ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கட்சியை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரபாகரனுக்கும் ஓர் அமைச்சுப் பொறுப்பை வழங்குவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான பல செயற்பாடுகளை அண்மையில் மேற்கொண்டுள்ளமை உலகறிந்த உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆளும் கட்சி அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டால் அதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயங்கரவாதிகளை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் நாடு பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.