வணங்கா மண் கப்பலுக்கு தடை

vanagaman1வன்னி மக்களுக்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் பிரித்தானியாவில் இருந்து வன்னிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த வணங்கா மண் நடவடிக்கைக்கான கப்பலுக்கு பிரித்தானியாவில் இருந்து செல்ல அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கப்பலில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள் கடத்தப்படக் கூடும் என்று சிறீலங்கா அரச முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பிரிட்டன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இருப்பினும் சிறீலங்காவின் இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரிட்டன் அதிகாரிகளுடன் மனிதாபிமான திட்ட ஒழுங்கமைப்பாளர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதில் முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர் என்று டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.