பச்சைப்புல்மோட்டையில் வலிந்த தாக்குதல்களை படையினர் தொடுத்துள்ளனர்

sla-armyசிறீலங்கா அரசாங்கம் 48 மணிநேர வலிந்த தாக்குதல் நிறுத்தம் ஒன்றை அறிவித்து விட்டு இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு கிழக்கே அமைந்துள்ள பச்சைப்புல்மோட்டைப் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் மீது வலிந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதேநேரம் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடங்கும் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பிரதேசங்களை இலக்கு வைத்து எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களால் படையினர் தாக்குதளை நடத்தியுள்ளனர்.

அத்துடன் புதுக்குடியிருப்பு பின்னணி நிலைகளுக்கு பேருந்துகள் மூலம் பெருமளவான சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.