48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்?

200px-flag_of_sri_lanka_svgமகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போர் நிறுத்தம் வரும் இடைவெளியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்குமாறும் அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கும் படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறணையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே அனைத்துலக ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது சிறீலங்கா அரசின் இந்த கபடத்தனமான இச்செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கையை தொடர் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்த அனைத்துலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.