முதன்முறையாக அயர்லாந்தில் தமிழ்மக்களும் சோஷலிச கட்சியினரும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்

irland-200அயர்லாந்து தலைநகர் DUBLIN நகரில் அயர்லாந்து (ஐரிஷ்) இன மக்களும், அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் இணைந்து முதன்முறையாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கணக்காண ஐரிஷ் மக்களும் அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.

நேற்று பிற்பகல் (14-04-09) 5.30 மணிக்கு ஆரம்பமான இக் கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை அனுப்பக் கோரியும்,தமிழீழ விடுதலை புலிகளுடன் உடனடி பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படியும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அங்கு வருகை தந்த அயர்லாந்து சோஷலிச கட்சியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோ ஹிஜின்ஸ் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மற்றும் பலர் அங்கு உரையாற்றினர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.