பொதுமக்களின் போக்குவரத்துக்காக யாழ்ப்பாணம்-கண்டி ஏ 9 வீதி அடுத்த மாதம் திறக்கப்படும் : அரசாங்கம்

a9யாழ்ப்பாணம்-கண்டி ஏ 9 வீதி அடுத்த மாதம் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ 9 வீதியில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மே மாதம் இரண்டாம் வாரத்தில் வீதி திறக்கப்படும் என பெருந்தெருக்கள் அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி அதிகாரச் சபையின் அலுவலகம் ஒன்று திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ9 வீதி ஓமந்தையில் இருந்து முகமாலை வரை கடந்த மாதம் திறக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக படையினருக்கான மற்றும் யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசிய விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.