கட்சி என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது: அரசாங்கம்

கட்சி என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாதென அரசாங்கம் இணைத்தலைமை நாடுகளிடம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு இணைத் தலைமை நாடுகள் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னிக்குச் செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
பிரபாகரனை வலுப்படுத்தும் வகையிலான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை என அரசாங்கத் தரப்பு உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு இணைத் தலைமை நாடுகள் விடுத்த வேண்டுகோளை புலிகள் நிராகரித்துள்ளனர்.

ஆயுதங்களை களைந்து அடிபணிய முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஈழப்போரை கைவிடும் எண்ணம் இல்லை எனவும், தற்போது தேவைப்படுவது ஓர் யுத்த நிறுத்தமொன்றே எனவும் புலிகள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.