சற்று நேரத்திற்கு முன்னர் முல்லைத்தீவில் மோதல் மீள ஆரம்பித்திருப்பதாக அறியப்படுகிறது

soldiers-in-mullaitivu48 மணித்தியால போர் நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து இராணுவம் தமது தாக்குதலை மீள ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவின் இரணைப்பாலை உள்ளிட்ட யுத்த சூனியப் பிரதேசத்தை தற்போது இராணுவம், நெருங்கியுள்ளதால் மக்கள் அதிகம் பீதியடைந்திருப்பதாக அறியப்படுகிறது.

கணரக ஆயுதங்களை நகர்த்தி மூன்று முனைகளில் இராணுவம் முன்னேற முற்பட்டுள்ளதால் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சற்று நேரத்திற்கு முன்னர் கடும் சண்டை மூண்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பல அப்பாவிப் பொது மக்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக செய்திகளை பெற நாம் முல்லைத்தீவுடன் தொடர்புகளை மேற்கொள்ள உள்ளோம், அதுவரை செய்திகளுடன் இணைந்திருங்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.