பிரித்தானியாவில் 10வது நாளாக உண்ணாவிரத போராட்டம் – சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை கவலைக்கிடம்

uk-1பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இன்று 10 ஆவது நாளாக சாகும்வரை உண்ணாநிலை இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அங்கு ஒருவித அச்ச உணர்வு மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு இரவு-பகலாக சென்று கொண்டிருக்கின்றனர்.

உண்ணாநிலை இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனை கைகூப்பி வணங்கி கண்ணீர் மல்க அவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

சிறியோர் தொடக்கம் முதியோர் வரை வயது வேறுபாடின்றி இரவு-பகல் பாராது மேற்படி போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேநேரம் மருத்துவக் குழுவினர் சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் அருகே இருந்தவாறு அவரது உடல்நிலையை பரிசோதித்து வருவதுடன் தமது கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.