ஐ.நா. பாதுகாப்புப் பேரவை விவாதங்களின் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது: மெக்ஸிக்கோ

un2ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கையின் யுத்த சூழ்நிலை குறித்து நடைபெறும் விவாதங்களின் போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என மெக்ஸிக்கோ அறிவித்துள்ளது.
இலங்கை குறித்த பாதுகாப்புப் பேரவையின் நடவடிக்கையின் போது மெக்ஸிக்கோ அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வெளியிடப்பட்ட தகவல்கள் அடிப்படையற்றவை என என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான மெக்ஸிக்கோ பிரதிநிதி க்ளாவுட் ஹெல்லர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு நியாயம் கிட்டும் வகையில் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர்
பொதுமக்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மெக்ஸிக்கோவிற்கும் இலங்கைக்கும் இடையில் நல்ல உறவு காணப்படுவதாகவும் இலங்கையின் சூழ்நிலை குறித்து அந்நாட்டுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதகாவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் பேரவையின் நடவடிக்கைகளின் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக மெக்ஸிக்கோ செயற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைத் தலைமைப் பொறுப்பை மெக்ஸிக்கோ வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.