இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும்: பிரான்ஸ், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்கள்

இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் முனைப்பை தவிர்த்து நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றினை முன்னெடுக்க முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் டேவிட் மில்பான்ட் அவர்களும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கௌன்ச்னரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோதல் தவிர்ப்பு வேளையில் எதிர்பார்த்த அளவிலான மக்கள் வெளியேறாமை குறித்து கவலையடைவதாக அவர்கள் அந்த அறிக்கையில் குறிபிட்டுள்ளனர்.

இதன் ஊடாக விடுதலைப் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்துள்ளமை உறுதியாவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் புதிய யுத்தநிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பான்ட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.