5வது நாளாக கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதப்போராட்டம்; சுவிஸ் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைப்பு

Ammpalavanar

Ammpalavanar

வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர்.

கடந்த புதன்கிழமை காவல்துறையினர் இவரைப் பலாத்காரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்றே வருகின்றது. தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நீரருந்தவோ உணவுண்ணவோ மாட்டேன் என அவர் மறுத்துவரும் நிலையில் வைத்தியசாலையில் அவசரபிரிவில் வைத்து அவருக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டு சேலைன் ஏற்றப்பட்டது.

எனினும் அவர் தொடர்ந்தும் நீரருந்தவோ உணவுண்ணவோ மறுத்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை இவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுவிஸ் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமது உண்ணாவிரதம் தொடர்பில் அதிகளவில் செய்திகளை வெளியிட்டு வரும் சுவிஸ் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு தனது நன்றியை கிருஸ்ணா அம்பலவாணர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.