09ஆவது நாளாக ஈழவேந்தன் உண்ணாநிலை போராட்டம்

eelaventhanமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க ஈழவேந்தன் தென்னாபிரிக்கா, டேர்பன் நகரில் அமைந்துள்ள அருட்பாக் கழகத்தில் தனது உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார்.

அவரது உடல்நிலை தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளமையும், அவரது தோற்றத்தில் களைப்புத் தன்மையையும் அவதானிக்கக் கூடியவாறு இருந்தது.

கடந்த சில நாட்களில், தமிழின உணர்வாளர் பழ. நெடுமாறான் உள்ளடங்கலாக பலர் இந்தியாவிலிருந்து தொலைபேசி மூலம் அவருக்கு ஆசி வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.

தனது உண்ணா மறுப்பு முயற்சி பயனளிக்காமல் போகவில்லை. தென்னாபிரிக்க அரசியல் வட்டாரத்தில், தமிழ்த் தேசியப் பிரச்சினை எந்தவித தாமதமும் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துநிலை உருவாகியுள்ளது.

நான் ஊடகங்களுக்கு, அவர்கள் கொடுத்த செய்தி முன்னுரிமைக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என ஈழவேந்தன் குறிப்பிட்டார்.

eelaventhan2eelaventhan3

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.