வயிற்றின் தசைகளைப் பயன்படுத்தி காரை 20 மீற்றர் தூரம் இழுத்து சாதனை (காணொளி இணைப்பு)
- ஏனையவை| 04. 08. 2011, வியாழக்கிழமை, தமிழீழ நேரம் 2:24
வயிற்றிலுள்ள தசைகளின் சக்தியால் 12 பேர் அமர்ந்திருந்த காரொன்றை 20 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சீனாவைச் சேர்ந்த வு ஸிலோங் என்பவர் சாதனை படைத்துள்ளார். தனது வயிற்றின் தசைகள் மூலம் உருவான உலோக கட்டமைப்பை வயிற்றில் ஒட்ட வைத்து அதில் கட்டப்பட்ட கயிற்றின் மூலம் காரை இழுத்து அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தொன்றையடுத்து அவருக்கு இந்த அபூர்வமான ஆற்றல் கிடைத்துள்ளது.
இதன் போது அவர் இழுத்த நிறை 2.2 தொன்களாகும்.
இது தொடர்பாக வு ஸிலோங் விபரிக்கையில் நான் எனது தசைகைளப் பயன்படுத்தி காரொன்றை இழுப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் சிறிய அளவான பொருட்களையே வயிற்றின் தசையை பயன்படுத்தி நான் தூக்கியுள்ளேன் என்று கூறினார்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பதே தனது கனவு என அவர் தெரிவித்தார்.

