இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் -அமெரிக்கா தெரிவிப்பு

usa-flagதமிழீழ விடுதலைப்புலிகளுடன் தசாப்த காலமாக இடம்பெறுகின்ற மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது.

இத்தருணத்தில் இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலவுகின்ற மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளதுடன் மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் ,இடைத்தங்கல் முகாம்களுக்கு மனிதாபிமான பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் செல்வதற்கு அனுமதியளிக்கவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.