விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை எதிர்பார்துள்ளோம்: ஆயுதப்போராட்டத்தை அரசியல் தீர்வின் மூலம் முடித்துவைக்க விரும்புகின்றோம்

selvarasa_pathmanathan_021இலங்கத்தீவில் தமிழ்தேசத்திற்கு எதிரான நீதியற்ற செயல்களில் வரலாற்று விளைவே புலிகளின் ஆயுதப்போராட்டம். அனைத்துலக சமூகம் தமிழ்தேசத்திற்கு எதிரான அநீதிகளை தீர்த்து வைக்கும்போது ஆயுதப்போராட்டத்தின்தேவை தாமாகவே நீங்கிவிடும் என்று தமிழீழத்தின் வெளியுறவுத்துறைப்பொறுப்பாளர் செ.பத்மநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உடனடி நிரந்தர போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு தமிழரின் மானிட அவலம் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வுக்கு நாம் தயார் என அனைத்துலக சமூகத்திற்கு உறுதிபட தெரிவிக்கின்றோம்.

அரசியல் தீர்வின் ஊடான தமிழர் பிரச்சனைக்கான தீர்வே இலங்கை தீவில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் உடனடி நிரந்தர போர்நிறுத்த அழைப்பை நிராகரித்து சிறீலங்கா அரசால் 15ம் திகதி தொடக்கம் தமிழ்மக்கள் தஞ்சமடைந்துள்ள ‘பாதுகாப்பு வலையம்’ மீதான தாக்குதலை எதிர்த்து புலிவீரர்கள் சமராடி வருவதாகவும் அரச படைகளின் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் பலநூறு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நாகரீகமடைந்த அனைத்துலக சமூகத்திற்கு தார்மீகரீதியாக இப்பொரும் அவலத்தை நிறுத்தும் கடப்பாடு உள்ளது. அதிலும் முக்கியமான ரோக்கியோ இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வேயுடன் இந்தியாவிற்கு இப்போரை சிறீலங்கா அரசின் ஊடாக நிறுத்தி உடனடி நிரந்தர போர்நிறுத்தத்தை கொண்டுவரும் வல்லமையும், சிறீலங்கா அரசுடனான நலன்சார் செல்வாக்கும் உள்ளது.

அனைத்துலக சமூகத்திற்கு பாதுகாப்பு வலயத்தில் நிகழும் அவலநிலை தெரிந்திருந்தும் போர்நிறுத்த்தை கொண்டுவரவோ, மானிட அவலத்தை தடுத்து நிறுத்தவோ முன்வராமை கண்டு அதிருப்தியடைந்துள்ளோம். ஆனைத்துலக சமூகத்தின் செயலற்ற வலுவற்ற தன்மை இராணுவத்தீர்வை நோக்கி சீலங்கா அரசை ஊக்கிவிக்கும் அதேவேளை இந்நாடுகள் அரசியல் தீர்வை நோக்கி உதவவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு காணமுயல்வது இலங்கை தீவிற்கோ அல்லது இப்பிராந்தியத்திற்கோ உறுதித்தன்மையை கொண்டுவரப்போவதில்லை. தமிழர் பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வே சமாதானத்தை இலங்கை தீவிற்கு கொண்டு வரும்.

இம்முக்கிய தருணத்தில் புலிகள் அனைத்துலக சமூகத்திடம் கேட்டுகொள்வது உடனடி நிரந்தர போர்நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான சாதியமான களநிலை உருவாக்கம், நியாயமான அரசியல் தீர்வுநோக்கிய செயற்பாடுகளின் ஆரம்பம் என்பனவாகும் என்று தமீழத்தின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர் செ.பத்மநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.