ஐநா வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம்

UN

UN

வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஐநாவின் விசேட பிரதிநிதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தின் கடல் பிராந்தியத்தில் வாடகைக்கு அமர்த்திய படகுகளை செஞ்சிலுவை கொடிகளுடன் நிறுத்தி பொதுமக்களை அவற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது

செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் வன்னியின் கரையோரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் படகுகளில் ஐநாவின் பிரதிநிதிகளும் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநாவின் இந்த கூட்டு நடவடிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் ஐநாவால் அனுப்பி வைக்கப்படும் படகுகள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அவை பாதுகாப்பு வலய கரையோராங்களுக்கு செல்வதை தடுக்கவோ விடுதலைப் புலிகளால் முடியாது என்றும் மீறி அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரி;க்கா மற்றும் இந்தியா படைகள் உள்ளடக்கப்படும் ஐநாவின் பாதுகாப்பு படையினை ஈடுபடுத்தி மக்களை மீட்பதற்கு ஐநா தாயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஆலோசனைக்கு அமைவான ஐநாவின் இந்த நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இந்தியாவிற்கும் தெரியப்படுத்தும் நோக்கிலேயே இந்தியரான விஜய் நம்பியாரை பான் கீ மூன் ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக இராஜதந்திர தரப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.