புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பிரதான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதன் நியமனம்

அமைப்பின் தலைமை பீடம், தமது சர்வதேச உறவுகளுக்கான பிரதான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதன் என்பரை நியமித்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பு புதிதாக சர்வதேச உறவுகளுக்கான திணைக்களம் என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாதன் விடுதலைப்புலிகளின் சமாதான முனைப்புகள் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களை கையாள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளிநாட்டில் இருந்தவாறு தமது பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
பா. நடேசன் இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.