அன்புச்சகோதரன் பரமெஸ்வரனுக்கு சிங்களவர்களின் கொடூரமான சிறையினுள் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் எழுதிக்கொள்வது.

prison_srilankaஇன உணர்வின் உறவுக்கு வணக்கம்

உயிரைப் பணையம்வைத்து இலட்சிய வேள்வியினுள் உறுதி தளராது பயணிக்கும் அன்புச்சகோதரன் பரமெஸ்வரனுக்கு சிங்களவர்களின் கொடூரமான சிறையினுள் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் எழுதிக்கொள்வது.

அன்புச் சகோரதரனே தேசங்கள் கடந்தும் தமிழ் ஈழதேசத்தின் சுதந்திரவிடுதலைக்காக உயிரை சிறுகச் சிறுக வதை செய்து சர்வதேசத்தின் மரத்துப்போன மனசாட்சியினை வெளிக்களச் செய்து எம்மின மக்களின் கொடிய மரணங்களை தடுத்து நிறுத்த நீர் நடத்தும் இந்தப் பட்டினிப்போராட்டம் நிச்சயம் வெல்லும்.

“உறுதி கலையாத உத்தமனே உன் பின்னே உலகத் தமிழ் இனமே திரண்டு எழுந்து நிற்கிறது” வாக்குறுதிகளை நம்பி நம்பியே வாழ்கையை தொலைத்தவர்கள் நாம் இதை இதயத்தில் நிறுத்திக்கொள் வாக்குறுதிகள் உம் இலட்சியப் பயணத்திற்கு தடைகள் போடப்படலாம் தகர்த்தெறி நாங்கள் எங்கள் கையில் எந்த ஆயுதத்ததை ஏந்தவேண்டும் என்பதனை எதிரியே தீர்மானிக்கிறான் எப்படியாவது போராடி இலட்சியத்தை வென்றெடுப்பதே ஈழத்தமிழனின் நோக்கம்.

“அக்கினிகளாய் வெடித்துச் சிதறுவோம் அகிம்சையில் ஆவியும் துறப்போம்” இலக்கை ஒன்றை அடைவதற்கான பாதைகள் மட்டுமே வேறுவேறு நீர் பயணிக்கும் பாதை வழியே அன்று சென்ற எங்கள் நெஞ்சங்களின் விடுதலைத் தீயே மூசி எழச் செய்த அண்ணன் திலீபனதும் அன்னை பூபதியினதும் ஆசிகள் உம் இலட்சிய பயணத்தின் பாதையை செம்மைப்படுத்தும் திலீபனண்ணா அன்று எம் நெஞ்சங்களில் மூட்டிய தீ இன்றும் கனன்று கொண்டிருப்பதுபோல் உம்மைப் போன்றவர்களினால் மூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உயிர்த்தியாக தீ புலம்பெயர் தேசங்களின் உள்ளவர்களது நெஞ்சங்களை அறைந்து கேள்விகேட்பதுடன் சர்வதேச சமூகம் தனது மனசாட்சியினைத் திறந்து கொள்ளவும் வழிவகுக்கும் என்பது உறுதி தியாகங்களே வரலாறு ஆகின்றன உம் தியாகப் பயணமும் வரலாறு ஆகும் நிச்சயம்.

வாழ்த்துகள்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.