சிறீலங்காவின் கொலைவெறிக்கெதிராக நோர்வே நாடாளுமன்ற முன்றலில் தமிழ் இளையோர்களால் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!

snv30400சிறீலங்கா இனவெறி அரசால் வன்னியில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுவருவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்து, நோர்வேவாழ் தமிழ் இளையோர்களாலும், உணர்வாளர்களாலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் ஒருநாள் இடைவெளியின் பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி தொடர்கிறது.

வியாழக்கிழமை காலை ஏழுமணிமுதல் இரவு பத்துமணிவரையும் உணர்வுகளோடு சுமார் நானூறிற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் நோர்வேயின் அரசியல் கட்சிகளின் பல்வேறுபட்ட பிரிவினரும் கலந்துகொண்டு, ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும், நோர்வே அரசு உடனடியாக போர்நிறுத்துமொன்றுக்கான அழுத்தத்தை சிறீலங்கா அரசுக்கு வழங்குவதோடு, சர்வதேச சமூகத்தையும் ஒன்றுதிரட்டி வன்னியில் சிங்கள கொலைவெறி அரசின் கோரக்கைகளுக்குள் சிக்குண்டிருக்கும் அப்பாவித்தமிழ் மக்களை காக்கவேண்டும் எனவும் உரையாற்றினர்.

இப்போராட்டத்தில் பிற்பகல் வேளையில்,

சோஷலிச இடதுசாரி கட்சியின் Akthar Chauthri, Ebba Boye, செந்தேர்தல் கூட்டணியின் Erling Folkvord, செந்தேர்தல் கூட்டணியின் இளைஞர் பிரிவைச்சேர்ந்த Mari Eifring, இடதுசாரி கட்சியின் இளைஞர் பிரிவைச்சேர்ந்த Naomi Røkkum, வலதுசாரி கட்சியின் இளைஞர் பிரிவைச்சேர்ந்த Henrik Asheim, கிறிஸ்தவ மக்கள்கட்சியின் இளைஞர் பிரிவைச்சேர்ந்த Kjell Ingolf ஆகியோர் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கி உரையாற்றியிருந்தனர்.

இவர்களில் செந்தேர்தல் கூட்டணியின் Erling Folkvord அவர்கள் பல்லாண்டு காலமாக ஈழத்தமிழர்களுடன் நல்லுறவை பேணிவருபவரும், அவர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை ஆதரித்துவருபவரும், தமிழீழ ஆதரவாளருமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை பிற்பகலிலிருந்து சீரற்ற காலநிலையோடு, மழைதூறலாக இருந்தபோதிலும் தாயகத்தில் சிங்கள இனவேறி அரசின் கோரப்பிடிக்குள் சிக்குண்டிருக்கும் நமது உறவுகளுக்காக தங்களின் உணர்வுகளை பலவழிகளிலும் வெளிப்படுத்தியிருந்தனர். மாலை ஏழுமணியோடு முழக்கங்களை எழுப்புவதற்கான அனுமதி இல்லை என்றபோதிலும், இரவு பத்துமணிவரையிலும் அமைதியாக அவ்விடத்தில் கூடியிருந்த மக்கள் உணர்வுகளின் கொந்தளிப்போடு இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.