எனக்கு ஒன்றும் புரியவில்லை! ஈழமக்கள் ஒரு புழுவிலும் கேவலமானவர்களா?

vanni_20090222005கருணாநிதித் தாத்தா! எனக்கு ஒன்றும் புரியவில்லை ஈழமக்கள் ஒரு புழுவிலும் கேவலமானவர்களா?இன்று சாவின் விளிம்பில் இருக்கும் என்போன்ற குழந்தைகள் இன்றி எல்லோரையும் காப்பற்றும் படி உங்களைக் கண்ணீர் மல்க நான் மன்றாடுகிறேன்.

என் தமிழன் மேல் இரசாயனக் குண்டும்இ கொத்துக் குண்டும் …………..எனப் போட்டு இந்திய அரசாங்கம் பரிசோதிப்பதை நானும் இந்தியன் என்ற முறையில் வெட்கம் அடைகிறேன். நானாவது பரிகாரம் தேடவிழைகிறேன். உங்கள் தமிழ்ப் புலமை மீது ஆணையிடுக் கூறுங்கள். உங்கள் உள்ளம் உள்ளுறக் குமுறவில்லையா? நிர்ப்பந்தம் எனக் காரணம் காட்டாமல் தமிழீழ மக்களுக்காக உயிர்ப் பிச்சை கேட்கும் இந்த இந்திய சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆணை பிறப்பியுங்கள் “போர் நிறுத்தம் உடனடியாக அமுலாகிறது” என.

தியாகி முத்துக்குமாரன் ஈழத்தமிழர்களுக்காக செய்த தியாகத்தில் தமிழகமே திரும்பிப் பார்த்தது. ஆனால் அதை அரசியல்வாதிகள் நல்ல முறையில் உபயோகிக்கத் தவறிவிட்டனர் என்பதுதான் உண்மை. இதுவே ஈழத்தமிழரின் துர் அதிட்டம்.

ஒரு நாட்டைப் போர் புரியாதே என நம்மால் எப்படிச் சொல்லமுடியும் என நீங்களோ? அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ கூறினால் அப்போ நம் இராணுவத்தைஇ கடல் படையை ஏன் அவர்களுக்குத் துணையாக அப்பாவிகளைக் கொன்று குவிக்க அனுப்பினாய்? உன் வார்த்தையைக் கேட்காதவனுக்கு ஏன் உதவி புரிகிறாய்?

தமிழகத்தில் உண்மையைச் சொல்பவர்களுக்கு எல்லாத் தீமைகளையும் இழைக்கும் மனிதர்களை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைத்துள்ளீர்களா? அல்லது கெட்டவர்கள் உங்கள் பக்கமிருந்து உங்களின் பெயரைக் கெடுக்கிறார்களா? உங்கள் மனது என்ன அவ்வளவு பாறாங்கல்லா? அங்கு ஒட்டு மொத்த மக்களும் அலறுகிறார்களே உங்கள் செவிகளில் விழவில்லையா? கண்ணிருந்தும் குருடராய், செவியிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய் இருக்கக் கூடாது தாத்தா.

உங்களின் உளியின் ஓசை காவியத்தைப் பார்த்து ரசித்தோம் அன்று. அதில் நீங்கள் வர்ணித்த காதல், பாசம், விரகம் போல் அங்கு தமிழீழத்திலும் போரின் மத்தியிலும் இதனினும் மேம்பட்ட காவியங்கள் எழுதப்படாமல் போயுள்ளன. ஓசையின் நாயகனே ஈழத்த்மிழரின் வாழ்வு உன் கையில், போரை நிறுத்துங்கள் என உன் வாயிலிருந்து ஓசை எழுப்பு உன்னை உலகம் என்ன, உங்கள் சொந்த் மகள் கனிமொழி அவர்களும், என் தந்தை தமிழனுக்கு நல்லது செய்தார் என மனம் மகிழ்வார்.

ஈழத்தமிழர், புலிகள் இவர்கள் உங்களுக்கு ஏதாவது துரோகம் செய்தார்களா? பழி வாங்குவது எனிலும் இது சமயமல்ல. அவர்கள் தமது சொந்த மண்ணுக்குப் போராட்டுவது தவறா? உங்கள் மகள் கனிமொழியும் மேடைகளில் பேசினாரே. அவர் துரோகியா? அவரின் வாயை மூடுவதற்குத்தான் பதவி கொடுத்துப் பக்கத்தில் வைத்துள்ளீர்களா?

போர் என்றால் போர் விதி வரம்பு மீறாமல் போர் புரியட்டும் சிங்கள பேரினவாத அரசு. ஆனால், அவர்களுக்கு நேர்மையே கிடையாது. அதனால் நேர்மையான இந்திய அரசு, அநீதிக்கு துணை போகிறது இன்னும் கொடுமை எதுவெனில் இன்று இப்போது இரசாயனக் குண்டை சொந்த மண்ணுக்குப் போராடிய மைந்தர்களின் மேல் ஏவி ஆயிரக் கணக்கில் மண்ணின் மைந்தர்களைப் பலி வாங்கியதே இது தகுமா?

உங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக இருவரைப் புலிகள் என கைது செய்ததாக அறிந்தேன். இதற்காக பாவம் அந்த தமிழீழ மக்களைப் பழி வாங்காதீர்கள். “இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன் நயம் செய்து விடல்”.

நமது இரத்தங்களைக் காப்பற்ற இக்கணமே ஓடிவாருங்கள்! அங்கு பாதுகாப்பு வலயத்தினுள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என எனது தாயார் தத்தெடுத்த சிறுவர்கள் அதுவும் அனாதைச் சிறுவர்கள், தத்தெடுக்கு முன் அனைவரும் உடல் உறுப்பு பெரிதளவில் பாதிக்கப் படாத ஆனால் ஒருத்தி மனநலம் குன்றியவள், ஒருவன் கண் பாதிக்கப் பட்டவன். 3 சிறுமிகள், 3 சிறுவர்கள்.

இவர்களை நான்கு மணித்தியாலங்களும் பார்த்துக் கொள்வதற்கு அநாதரவான இரண்டு ஆசிரியர்கள் என பாதுகாத்துவந்தோம். ஆனால், இன்று வந்தது அந்த அதிர்ச்சிச் செய்தி ஆறு வாரங்களுக்கு முன் ஒரு ஆசிரியர், ஒரு குழந்தை இறந்துவிட்டனர். கோரச்சாவு இவர்கள் கண்முன். மற்றும் இரு குழந்தைகளிற்கு உடல் உறுப்புகள் பாதிப்பு, மற்றையோருக்கு புரையோடிப் போன தீப் புண்கள்.

பெரிதளவில் பாதிக்கப் பட்டதுடன் அந்த வலியுடன் ” அண்ணாஎங்களுக்கு காயம் பட்ட இடமில்லாமல் எல்லா உடம்பும் நோகுது, அண்ணா மயக்கம் வருகுது அண்ணா, தாங்க முடியவில்லை, அண்ணா அம்மா நீங்கள் இங்கு வாங்கோ நாம் மயக்கத்தில் கூடக் கண்மூட மாட்டோம்.

கண்ணையும், காதையும் திறந்த படியே இருக்கிறோம், நான் செத்தால் தமிழீழத்தின் ஒரு எண்ணிக்கையை அழித்ததில் மகிந்த அரசு மகிழ்ந்தாலும், தமிழீழத்திற்கு நான் துரோகம் செய்தவனாவேன். என் உயிர் அவ்வளவு மலிவா அம்மா? ஓடி வா அம்மா, அண்ணாக்கள் ஏதாவது செய்து சண்டையை நிறுத்துங்கோ.

அண்ணாக்கள் வலிக்குது, அண்ணா எங்களைப் போல் நிறையப் பேர் இங்க இருக்கினம், அம்மா, அண்ணா எதாவது செய்து சண்டையை நிறுத்துங்கோ. நாம் சாகக் கூடாது அம்மா, நான் தமிழீழத்தில் வாழ ஆசைப்படுவது தவறா அம்மா? இது எனது சொந்த மண் என்றாய்,  அம்மா இங்கு என் உயிரும் எனக்குச் சொந்தமில்லை என்றாகிற நிலைமையில் நாம் இருக்கிறோம்.

அம்மா காப்பாத்து, அம்மா நீ ஏன் உன்னை அம்மா என சொல்லி வைத்தாய்? காப்பாத்து அம்மா. உங்களையும்,அண்ணாக்களையும் பார்க்காமல் உயிர் துறக்க நேர்ந்ததாலும், நீங்கள் சொன்னது போல் தமிழீழம் காணாமல் சாகக்கூடாது என எமது உடல் ஒத்துழைக்காவிடாலும் மனதால் உடலுக்குக் கட்டளை போட்டு உயிரைக் கையில் வைத்துள்ளோம்.

தமிழீழம் கேட்பவர்கள் பயங்கரவாதிகள் என்றால் நானும் பயங்கரவாதி தான் அம்மா சாப்பாடும் இல்லையம்மா, தண்ணியும் இல்லையம்மா, (வளர்க்கும் ஆசிரியை) மாமிக்கு சரியான காயம் ஆனா எங்களை காப்பாத்தப் படாதபாடு படுறா. ”

இது மூன்று நாட்களுக்கு முன் கிடைத்த செய்தி. என் அம்மாவின் கடும் முயற்சியால் அவர்களுடன் நாம் பேசினோம். அம்மா சொன்னார், அவர்கள் மிக மிகப் பெரிய அளவில் அழிவைச் சந்திக்கப் போகிறார்கள். அதனால் உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என.

அதனால் நாம் எமது பாடசாலைகளுக்குப் பெற்றோருடன் போய் அங்குள்ள தலைமை ஆசிரியரிடம் ஈழத்தில் போரை நிறுத்தும் வரை நாம் பள்ளி வரமாட்டோம் தொடர் போராட்டத்தில் பங்கு பற்றப் போகிறோம் என எல்லா மாணவர்களும் ஒன்று திரண்டு அவரவர் பள்ளிகளில் நாளை முதல் தொடங்குவோம்.

கடவுளை நேரில் அழைக்கிறேன், தமிழ் ஈழமகள் உயிர் பெற

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இப்படிக்கு
மு சு சர்மா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.