யுத்த நிறுத்தம் என்ற சொல் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது – ரம்புக்வெல

keheliya-rambukwella-inயுத்த நிறுத்தம் என்ற ஒரு வார்த்தை சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட வார்த்தை என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.  அனைத்துலக சமூகத்திற்குப் பயந்து யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது. மகிந்த ராஜபக்ச தனது உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். படைத்துறை ரீதியாக பிரபாகரனை வெல்ல முடியாது என்ற அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டை அவர் தவிடுபொடியாக்கியுள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினை குறித்த தெளிவில்லாது வெளிநாட்டு அமைச்சர்கள் யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.