ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் எதிர்வரும் 29ம் திகதி இலங்கை குறித்த விவாதம்

unlo1ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் எதிர்வரும் 29ம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கை மற்றும் மியன்மார் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் க்ளவுட் ஹெல்லர் தெரிவித்துள்ளார்.

த ரெஸ்பொன்ஸிபலிட்டி டு புரொடெக்ட் அமைப்பினால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
இதன்படி, எதிர்வரும் 29ம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
 
அரசாங்கத்தின் நாட்டின் மக்களை பாதுகாக்க முடியாத நிலை தோன்றுமாயின் சர்வதேச சமூகம் தலையிட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமென பாதுகாப்புப் பேரவையின் தலைவர் ஹெல்லர் தெரிவித்துள்ளார்.
 
ஆயுத போராட்டங்களில் சிறுவர்கள் என்ற தொனிப்பொருளில் 29ம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
 
இதேவேளை, இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடத்த மெக்ஸிக்கோ அனுமதிக்காதென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
 
எனினும், பாலித கொஹணேவின் இந்த கூற்றை மெக்ஸிக்கோவின் துணை வெளிவிவகார அமைச்சர் கோமஸ் ரொபல்டோ மறுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.