தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு களையப்பட வேண்டும் ‐ ஸ்ரீகாந்தா

n_sri_kantha_1இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு களையப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசாங்க உயரதிகாரிகளுக்கும் தமது கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு குறித்த விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது எதிர்ப்பை மீறி இந்தியாவிற்கு விஜயம் செய்த குழுவினருடன் இதுவரையில் தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர்கள் துரோகம் இழைத்துள்ளதாகவும், தமிழர்களின் முதுகுப் புறத்தில் இந்தியா தாக்கியுள்ளதாகவும் ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
 
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி குறித்து தமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான சாதகமான பதிலையும் எதிர்பார்க்கவில்லை எனவும், அவ்வாறு சாதகமான பதில்கள் கிடைக்கப்பெற்றால் அது மிகவும் வரவேற்கத் தக்கது எனவும் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் நிறுத்தப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அப்பாவிச் சிலியன்கள் மோதல் தவிர்ப்பு பிரதேசத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு யுத்த நிறுத்தம் மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, சம்பந்தன் தலைiயிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மத்திய அரசின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.